Sunday, April 13, 2008

வேலை


தேடினேன்!!! தேடினேன்!!!
அமாவாசை அன்று நிலவு எங்கே என்று...
-பாலாஜி

கண்கள்






கடற்கரை


கடற்கரையில் காதலனும் காதலியும்

காதலன்: நீ அந்த அலை போல தெரிகிறாய்...
காதலி : ஏன்?
காதலன்: பெரிய அலை வரும் போது உன் கோபம் தெரிகிறது , அருகில் வரும் போது உன் சாந்தம் தெரிகிறது
காதலி : (சிரிப்புடன்) நீ என்னை அலையாய் பார்க்கிறாய்,
நான் உன்னை இந்த கரையாய் பார்க்கிறேன்...
காதலன்: ஏன்?
காதலி : கோபம் அடைந்தாலும், சாந்தம் அடைந்தாலும்,
நீ என்னை ஏற்றுக் கொள்கிறாயே !!!!!!!!!!!
-பாலாஜி

Saturday, April 12, 2008

தாமரை

மாலை நேரத்தில் தாமரை மலர்கள் தலைசாய்ந்தது
ஏன் என்று தெரியுமா???
சூரியன் சென்றதாலா?
இல்லை!!!!!!!!!!
என்னவள் அருகே சென்றதால்
-பாலாஜி

மச்சம்


என்னவள் முதுகில் இருக்கும் மச்சம் சொல்கிறது
அடுத்த பிறவியிலாவது உன் முகத்தை காண்பேனோ என்று....
-பாலாஜி


பாதம்


அவள் தலை குனிந்து கொண்டு வந்தாள்......
எங்கே தன் பாதம் எறும்பின் மேல் பட்டு விடுமோ என்று......
-பாலாஜி

முத்தம்


என்னவள் இதழ்களில் முத்தமிட்டேன்,
அவள் கோபம் அடைந்து கேட்டாள்
படத்தின் மேல் முத்தம் கொடுக்கிறாயே
இது நியாயமா என்று ?????????
-பாலாஜி

ரோஜா


வெள்ளை ரோஜா சிகப்பு ரோஜாவாக ஆகியது
என்னவள் அழகை பார்த்தும்....
-பாலாஜி

தாலி


என்னவள் தாலி சரடு வாங்கினாள்
மற்ற தாலி சரடுகள் எங்கின, நான் இந்த பிறவியிலாவது உன் தேகத்தின் மேல்
இருக்க மாட்டேனோ என்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-பாலாஜி

என்னவள்


அருகில் இருக்கும் பொழுது பார்க்கவில்லை...
தொலைவில் சென்றதும் திரும்பினேன் காணவில்லை...
-பாலாஜி

புன்னகை


நினைத்தாலே இனிக்கும் என்பார்கள் ஆனால்,
என்னவளை நினைத்தாலே அருகில் வந்து விடுகிறாள் இனிப்புடன்
(என்னவள் புன்னகையை சொன்னேன்)
-பாலாஜி